வரியிலிருந்து விலக்கு அளிக்க அமைச்சரவை ஒப்புதல்

உற்பத்தி வரிக்கு உட்பட்ட கார்கள் மற்றும் சிறப்புத் தேவைகள் உள்ளவர்கள் பயன்படுத்தும் உபகரணங்களுக்கு சமூகப் பாதுகாப்பு வரியிலிருந்து விலக்கு அளிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அத்துடன், 2022 ஆம் ஆண்டு 25 ஆம் இலக்க சமூகப் பாதுகாப்பு வரிச் சட்டத்தில் மேலும் பல திருத்தங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மான செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.