கிளிநொச்சி மாவட்ட சாரணிய ஆணையாளராக சி.விக்கினேஸ்வரன் நியமனம்
கிளிநாச்சி மாவட்டத்தின் சாரண மாவட்ட ஆணையாளராக சி.விக்கினேஸ்வரன் நேற்று புதன் கிழமை நியமிக்கப்பட்டார்.
பிரதம சாரண ஆணையாளர் ஜனப்ரித் பெனான்டோவினால் சி.விக்கினேஸ்வரனுக்கான நியமன கடிதம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
புதிய மாவட்ட ஆணையாளர் பளை மத்திய கல்லூரியில் சிறந்த சாரணராக சேவையாற்றி, ஜனாதிபதி விருதினை பெற்றவர். அவர் அப்பாடசாலையை தேசிய ரீதியில் பல சாதனைகள் படைப்பதற்கு காரணமாக இருந்தவர் ஆவார். அத்துடன் கிளிநொச்சி உதவி மாவட்ட ஆணையாளராகவும் கடமையாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்