பேருந்து ஊழியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பு
ஹட்டன் – டயகம வீதியூடாக சேவையில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் பேருந்து ஊழியர்கள் இன்று செவ்வாய் கிழமை காலை முதல் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
ஹட்டனில் இருந்து டயகமவிற்குச் செல்லும் பிரதான வீதியைப் புனரமைத்துத் தருமாறு கோரி அரச மற்றும் தனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரச மற்றும் தனியார் பேருந்து ஊழியர்களின் இந்த பணிப்புறக்கணிப்பு காரணமாக குறித்த வீதி மார்க்கத்தில் செல்லும் பயணிகள் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
