ஆற்றிற்குள் பாய்ந்து பேருந்து விபத்து: 5 பேர் பலி
ரஷ்யாவில் பயணிகள் பேருந்து பாலத்தில் இருந்து கவிழ்ந்து ஆற்றிற்குள் விழ்ந்து விபத்திற்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
20 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த குறித்த பேருந்து வேகக் கட்டுப்பாட்டை இழந்து மொய்கா என்றழைக்கப்படும் ஆற்றிற்குள் வீழ்ந்துள்ளது.
விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் 4 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் விபத்துச் சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்