நானுஓயா விபத்து : பஸ் சாரதி கைது

நானுஓயா பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விபத்தில், விபத்துக்கு காரணமான 62 வயதான பஸ் சாரதி இன்று சனிக்கிழமை பிற்பகல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்தில் சிறு காயங்களுக்கு உள்ளான இவர் நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

முதற்கட்ட விசாரணையில் கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதே விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது.

நேற்று இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச சேர்ந்த ஐவர் உட்பட ஏழுவர் உயிரிழந்ததுடன் பாடசாலை மாணவர்கள் உட்பட 53 பேர் காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.