
பேருந்து விபத்து: 30 பேர் வைத்தியசாலையில்
கொழும்பு – அவிசாவளை வீதியில் ரணால பிரதேசத்தில் இன்று புதன் கிழமை இடம்பெற்ற விபத்தில் மாணவர்கள் உட்பட 30 பேர் காயமடைந்துள்ளனர்.
கொழும்பில் இருந்து லபுகமுவ நோக்கி மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தும், எம்பிலிபிட்டியவில் இருந்து கொழும்பு நோக்கி வந்த தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது.
காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக நவகமுவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
