பாடசாலை வரலாற்றில் முதன்முறையாக 9ஏ சித்தி பெற்று மட்டு.ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரி சாதனை!

தற்போது வெளியாகியிருக்கும் 2024 ஆம் ஆண்டு கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகளின்படி மட்டக்களப்பு ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரி தமது பாடசாலை வரலாற்றில் புதிய சாதனையை படைத்துள்ளது.

கல்லூரியின் மாணவி செல்வி பாலசிங்கம் லேஸ்திகா 9ஏ சித்திகளை பெற்றுள்ளார் . ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரியில் 9ஏ சித்திகளை பெற்றமையானது பாடசாலை வரலாற்றில் இதுவே முதன்முறையாகும்

அத்துடன் மேலும் 4 மாணவிகள் 6ஏ சித்திகளை பெற்று பாடசாலைக்கு பெருமை தேடித் தந்துள்ளனர்.

பாடசாலையின் முன்னாள் அதிபர் திருமதி நிமலினி பேரின்பராஜா வழிகாட்டலின் கீழ் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பில் இவ்வாறான பெறுபேறுகளை பாடசாலை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலைக்கு பெருமை தேடிக் கொடுத்துள்ள மாணவிகளுக்கு பாடசாலையின் அதிபர் எஸ் டி முரளிதரன் ஆசிரியர்கள் பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.