“ரிவர்ஸ் கவ் கெர்ள்” செக்ஸ் ஆணுறுப்பில் முறிவு : இனி இது வேண்டாம்

பாலியல் உறவில் ஈடுபடும் போது விதவிதமான பாலியல் உறவில் ஈடுபட வேண்டும் என்ற ஆசை சிலருக்கு ஏற்படுவது உண்டு இதன் போது சில நேரங்களில் இது விபரீதத்தில் சென்று விட்டுவிடும்.

இந்தோனேசியாவில் 37 வயது நபர் தனது காதலியுடன் ரிவர்ஸ் கவ் கெர்ள் (Reverse Cowgirl) என்ற பொசிஷனில் இருந்த போது அவரது ஆணுறுப்பில் முறிவு ஏற்பட்டுள்ளது.

ரிவர்ஸ் கவ் கெர்ள் பாலியல் உறவின் போது ஆணுறுப்பில் முறிவு ஏற்பட்டு காயம் ஏற்பட்டுள்ளது. அவரது ஆணுறுப்பில் இருந்து இரத்தம் கசிய தொடங்கியது. மேலும், அவரால் சிறுநீர் கழிக்க முடியவில்லை. இந்த விபரீத திடீர் விபத்தையடுத்து உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து ஆணுறுப்பை சரி செய்தனர். முதலில் 3 நாள்கள் தீவிர சிகிச்சை வழங்கி பின்னர் இவர் மருத்துமனையில் இருந்து வெளியேறியுள்ளார்.

காயம் குணமாகும் வரை சிறுநீர் கழிக்க அவருக்கு catheter முறையில் டியூப் பொருத்தப்பட்டுள்ளது அவரின் ஆணுறுப்பு சீரானதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது அவருக்கு சிறுநீர் கழிக்கவோ, ஆண்குறி விரைப்பு ஏற்படுவதிலோ எந்த பாதிப்பும் இல்லை என தெரிவித்துள்ளனர்.

பாலியல் உறவில் பலவிதங்கள் இருந்தாலும் , இந்த ரிவர்ஸ் கவ் கேர்ள் பொசிஷன் தான் மிகவும் அபாயகரமானது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஆணுறுப்பில் ஏற்படும் சுமார் 50 சதவீத முறிவுகளுக்கு இந்த செக்ஸ் பொசிஷன் தான் காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான விபரீத உறவில் இனி ஈடுபட போவதில்லை எனவும் , இனி இது வேண்டாம் என்ற முடிவிற்கும் இவர் வந்துள்ளாராம்.