பேருவளையில் நிலநடுக்கம்

பேருவளை கரையோர பகுதியில் இன்று வியாழக்கிழமை பிற்பகல் சிறிய  நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் 3.7 மெக்னிடியூட் அளவில் பதிவாகியுள்ளது.

பேருவளையில் இருந்து சுமார் 34 கிலோமீற்றர் தொலைவில் இன்று பிற்பகல் 1 மணியளவில் இந்நிலநடுக்கம் உணரப்பட்டதாக, புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

எனினும், இதனால் சுனாமி அச்சுறுத்தல் இல்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.