
மட்டக்களப்பில் சுனாமி எச்சரிக்கை?
மட்டக்களப்பில் எவ்வித சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பில் பல பகுதிகளில் இன்று சுனாமி அனர்த்தம் ஏற்படப் போவதாக தகவல் பரப்பப்பட்டு, மக்கள் மத்தியில் அச்சநிலை உருவாகியது.
இதனையடுத்து, குறித்த தகவலில் உண்மை இல்லை என்பதனை மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் உறுதிப்படுத்தியுள்ளது.
