நியூசிலாந்தில் பாரிய நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை!

நியூசிலாந்தின் வடகிழக்கு திசையிலுள்ள கெர்மடெக் தீவுகள் பகுதியில் இன்று வியாழக்கிழமை 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் 10 கிலோமீற்றர் (6.21 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் மேலும் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது.