6 வயது சிறுமி சந்தேகமான முறையில் உயிரிழப்பு : பிண்ணனி என்ன?

பாணந்துறை – ஹிரண, பின்கெல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் 6 வயது சிறுமி ஒருவர் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஹிரண பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

தாய் மற்றும் தாயின் சட்டரீதியற்ற கணவருடன் வசித்து வந்த குறித்த சிறுமி பல நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்ததாகவும், அவருக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டிருக்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமி இதற்கு முன்னர் பல தடவைகள் தாயின் துணைவரால் தாக்கப்பட்டுள்ளதாகவும், கேட்டல் மற்றும் பேச்சு குறைபாடுகளை கொண்ட இந்த சிறுமியின் உடலில் பல தழும்புகள் மற்றும் வீக்கங்கள் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த மரணம் தொடர்பாக சிறுமியின் தாயான 25 வயதான பெண்ணொருவரும், அவரது கணவர் எனக்கூறப்படும் 29 வயதுடைய ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்

சடலம், பிரேத பரிசோதனைக்காக களுபோவில – கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் ஹிரண பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்