தனுஷ்கவினால் பாதிக்கப்பட்ட பெண்ணின் மூளையில் ஸ்கேன் சோதனை

இலங்கையின் கிரிக்கட் வீரர் தனுஷ்க குணதிலக்க, பலவந்த பாலியல் உறவின்போது அவுஸ்திரேலிய பெண்ணின் கழுத்தை நெரித்ததாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

20க்கு 20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிக்காக அவுஸ்திரேலியாவுக்கு சென்றிருந்த நிலையில், தனுஷ்க, பெண் ஒருவரை பலவந்தமாக பாலியல் உறவுக்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த பெண்ணின் கழுத்தை நெரித்ததாகவும், இதன் காரணமாக மூளையில் காயம் ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில், மருத்துவமனையில் பெண்ணின் மூளை ஸ்கேன் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் நீதிமன்றில் ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளன.

பாலியல் உறவின்போது ஒரு கட்டத்தில், அந்த பெண்ணுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது என்றும், இதனையடுத்து அவர் மறுநாள் காலை ஒரு ஆலோசனை சேவையை அழைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தனுஷ்க குணதிலக்க, கடந்த ஞாயிற்றுக்கிழமை, அவுஸ்திரேலிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

பின்னர் நீதிமன்றத்தில் பிணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அவரின் வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.