பொரலஸ்கமுவ துப்பாக்கி சூடு இளைஞன் உயிரிழப்பு ஒருவர் படுகாயம்
பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கள மாவத்தையில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 25 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியில் நடந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு சாலையில் நடந்து சென்றபோது, அதிகாலை 12.30 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக பொலிசார் தெரிவித்தனர். முச்சக்கர வண்டியில் வந்த துப்பாக்கிதாரி, துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றார்.
கல்கிஸ்ஸையைச் சேர்ந்த கிஹான் துலான் பெரேரா என அடையாளம் காணப்பட்ட உயிரிழந்தவர் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
முதற்கட்ட விசாரணையில், இசை நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக தெரியவந்துள்ளது. சம்பந்தப்பட்ட இரு தரப்பினரும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று நம்பப்படுகிறது என்று பொலிசார் தெரிவித்தனர்.
சந்தேக நபரைக் கைது செய்ய பொரலஸ்கமுவ பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.