
கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு!
பாணந்துறை – கொழும்பு பழைய வீதியில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில், நபர் ஒருவரின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளதாக, பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாணந்துறை வடக்கு, ஞானசேன மாவத்தையைச் சேர்ந்த, 37 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இன்று காலை வீதியோரமாக நபர் ஒருவர் கிடப்பதைக் கண்ட பொதுமக்கள் வழங்கிய தகவலின் பேரில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
இதன்போது, உயிரிழந்தவரின், கைகளும், கால்களும் கயிற்றினால் பலமாக கட்டப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது.
இது ஒரு திட்டமிட்ட படுகொலை என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்தக் கொலையுடன் கொலையாளிகளைக் கண்டறியும் நோக்கில், பாணந்துறை தெற்கு பொலிஸார் விசேட விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
