வங்கிக்கு அருகில் நபரொருவரின் சடலம் மீட்பு

மாத்தறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மத்தவத்த பகுதியில் உள்ள வங்கி ஒன்றிற்கு முன்பாக இனந்தெரியாத நபரொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த செய்தியின் பிரகாரம் நேற்று காலை சடலம் கண்டெடுக்கப்பட்டதுடன் உயிரிழந்தவர் 5 அடி 4 அங்குல உயரம் கொண்ட ஒல்லியான நபரென பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்