மாவடிப்பள்ளி வயல் பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்பு
-அம்பாறை நிருபர்-
உழவு இயந்திரத்தில் அறுவடை இயந்திரத்தை ஏற்றி கொண்டு, வயலுக்கு சென்ற நபர் ஒருவர், வயல் பகுதியில் சடலமாக, காரைதீவு பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளார்
அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, மாவடிப்பள்ளி வளைந்த வட்டையில், இன்று சனிக்கிழமை மதியம் இச்சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் நவகம்புர உதயபுர பகுதியை சேர்ந்த, கோரகே தொன் சானக சதுரங்க குமார (வயது 39) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவருக்கு வலிப்பு நோய் இருப்பதாக, தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், சடலத்தின் முகம் சிறிது சிதைந்த நிலையில் காணப்படுவதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
