
படகு விபத்து : நஷ்டஈடு இன்னும் வழங்கப்படவில்லை
-மூதூர் நிருபர்-
கிண்ணியா -குறிஞ்சாக்கேணி படகு விபத்தில் மரணித்தவர்களின் குடும்பங்களுக்கு இதுவரை அரசாங்கத்தால் நஷ்டஈடு கொடுக்கப்படவில்லை.
குறிஞ்சாக்கேணி படகு விபத்து நடைபெற்று சுமார் மூன்று வருடங்களாகியும் இதுவரையில் அரசாங்கத்தால் நஷ்ட ஈடு எதுவும் வழங்கப்படாமை தொடர்பாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் செவ்வாய் கிழமை கிண்ணியா பிரதேச செயலாளர் எம். கனியை சந்தித்து கலந்துரையாடி மரணித்த 8 குடும்பங்களுக்கான நஷ்டஈட்டை விரைவாக பெற்று கொடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
மேலும் ஏற்பட்ட கால தாமதத்தை கருத்தில் கொண்டு முன்னர் வழங்குவதாக குறிப்பிட்ட தொகையை விட அதிக தொகையை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
