
தம்பலகாமம் பிரதேச சபையில் இரத்ததான முகாம்
-கிண்ணியா நிருபர்-
திருகோணமலை-தம்பலகாமம் பிரதேச சபை ஏற்பாடு செய்த இரத்ததான முகாம், தம்பலகாமம் பிரதேச சபையின் தவிசாளர் எச்.தாலிப் அலி தலைமையில், பிரதேச சபை மண்டபத்தில் இடம் பெற்றது.

பெருமளவான உத்தியோகத்தர்கள், இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டு இரத்ததானத்தை வழங்கினர்.

இரத்த தானத்தை வழங்குவதன் ஊடாக இரத்த வங்கியில் ஏற்படும் இரத்த குறைபாடுகளை தவிர்க்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

