3 மாதங்களுக்கு ஒரு முறை மின்கட்டண திருத்தம்?

இலங்கை மின்சாரசபையை மறுசீரமைக்கும் அமைச்சரவை பத்திரம் ஒன்று அடுத்த வாரம் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்படும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் புதிய மின்சாரத்துறை சட்டமூலம் இந்த ஆண்டு இறுதிக்குள் நாடாளுமன்றில் முன்வைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை 6 மாதங்களுக்கு ஒருமுறை இடம்பெறும் மின்கட்டண திருத்தத்தை 3 மாதங்களுக்கு ஒரு முறை திருத்துவதற்கான வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டு வருவதாகவும் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்