
வெற்றிலையின் விலை அதிகரிப்பு!
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வெற்றிலைக்கு அதிக தேவை உள்ள நிலையில், வெற்றிலையின் விலை வேகமாக அதிகரித்துள்ளது.
அதன்படி, சந்தையில் ஒரு கைப்பிடி வெற்றிலையின் விலை சுமார் 400 ரூபாயை எட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒரு சிறிய கைப்பிடி வெற்றிலை சுமார் 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வறண்ட காலநிலை காரணமாக வெற்றிலை அறுவடை குறைந்ததும் வெற்றிலை விலை அதிகரிப்புக்கு காரணமாக அமைந்துள்ளது.
