ஆர்ட்டெமிஸ் II ஓரியன் விண்கலத்தில் இருந்து எடுக்கப்பட்ட பூமியின் அழகிய புகைப்படங்கள்!
நிலவை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும் ஆர்ட்டெமிஸ் II (Artemis II) ஓரியன் விண்கலத்தில் உள்ள விண்வெளி வீரர்கள் எடுத்த மிக முக்கியமான முதல் புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது.
இந்த பிரமிக்க வைக்கும் படங்களை மிஷன் கமாண்டர் ரீட் வைஸ்மேன் (Reid Wiseman) தனது கைடக்க கணினி மூலம் எடுத்துள்ளார்.

நாசா வெளியிட்டுள்ள இரண்டு படங்களுமே பூமியை விண்வெளியில் இருந்து காட்டும் அற்புதமான காட்சிகள் ஆகும்.
“நாம் எவ்வளவு தூரம் சென்றாலும், நாம் அனைவரும் ஒரே உலகம், ஒன்றாகக் கவனித்து, நம்பிக்கையுடன் உயர்வை நோக்கிப் பயணிக்கிறோம்” என்பதை நினைவூட்டும் விதமாக அமைந்துள்ளதாக ஹூஸ்டனில் உள்ள கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

ஓரியன் விண்கலத்தின் ஜன்னல் வழியாகத் தெரியும் பூமியின் காட்சி. இதை விண்வெளி வீரர்களின் பார்வையில் தெரியும் ஒரு “வெளிர் நீலப் புள்ளி” என்று நாசா வர்ணித்துள்ளது.
இந்த பயணத்தில் இடம்பெற்றுள்ள விண்வெளி வீரர் கிறிஸ்டினா கோக் (Christina Koch) இது குறித்துக் கூறுகையில், “ஒரே ஜன்னல் வழியாக முழு கிரகத்தையும் பார்ப்பது நம்பமுடியாத அனுபவம். நமது தாய் பூமி பகல் வெளிச்சத்தில் பிரகாசமாகவும், இரவில் நிலவின் ஒளியிலும் ஜொலிப்பதைப் பார்ப்பது மூச்சடைக்கச் செய்யும் அழகைக் கொண்டது. விரைவில் நிலவையும் இதேபோல் மிக அருகில் பார்க்கப்போகிறோம் என்பதை நினைக்கும் போது மிகவும் உற்சாகமாக இருக்கிறது.”

ஆர்ட்டெமிஸ் II திட்டமானது, பல ஆண்டுகளுக்குப் பிறகு மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அழைத்துச் செல்லும் ஒரு முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

