உலகக் கிண்ணம் வென்ற இந்திய அணிக்கு பிசிசிஐ வழங்கவுள்ள பரிசுத்தொகை!

இந்திய அணிக்கு 131 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

ஐசிசி 2026 டி-20 உலகக் கிண்ணத்தை மூன்றாவது முறையாக வென்ற முதல் அணி என்ற சரித்திர சாதனையை இந்தியா படைத்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 96 ஓட்டங்கள் என்ற வித்தியாசத்தில் இந்திய வெற்றி பெற்றது.

இந்தநிலையில், வெற்றி பெற்ற இந்திய அணிக்கு இந்திய கிரிக்கெட் சபை பரிசுத்தொகை அறிவித்துள்ளது.

அதன்படி, இந்திய அணிக்கு 131 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

போட்டியாளர்கள், பயற்றுவிப்பாளர்கள் என அனைவருக்கும் இந்த பரிசுத்தொகை பகிர்ந்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக டி20 உலகக் கிண்ணத்தை வென்ற இந்திய அணிக்கு ஐசிசி 27 ரூபாய் கோடி பரிசுத்தொகை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.