
மட்டக்களப்பில் இளைஞனின் சடலம் மீட்பு
மட்டக்களப்பு வாவியில் இருந்து இளைஞன் ஒருவரின் சடலம் இன்று வியாழக்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளதhக மட்டக்களப்பு தலைமையக பொலிஸhர் தெரிவித்துள்ளனர்.
நகரின் லேடி மெனிங் வீதிக்கு அருகாமையில் உள்ள வாவியில் இருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் திருக்கோயில் பகுதியைச் சேர்ந்த ரீ.சுதர்சன் (வயது-24) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கடந்த மூன்று தினங்களாக இவர் காணாமல் போயிருந்த நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளhர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் எதுவும் இதுவரை தெரியவரவில்லை, பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

