
மட்டு.செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற பழைய மாணவர்களுக்கான மாபெரும் கிரிக்கெட் மென்பந்து சுற்றுத்தொடர்
மட்டக்களப்பு பட்டிப்பளை செட்டிபாளையம் மகா வித்தியாலய விளையாட்டு குழுவினால், செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற ஆண்டு ரீதியான பழைய மாணவர்களுக்கான மாபெரும் கிரிக்கெட் மென்பந்து சுற்றுத்தொடர் இடம்பெற்றது.
இப் போட்டியானது பெப்ரவரி 18,19 மற்றும் 25 ம் திகதிகளில் செட்டிபாளையம் மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் வித்தியாலய அதிபர் தலைமையில் மிக விமர்சையாக நடைபெற்றது.
இப் போட்டியில் வித்தியாலய பழைய மாணவர்களான கோ.கருணாகரம் (பாராளுமன்ற உறுப்பினர்) , சி.அமலநாதன் ( மேலதிக செயலாளர் விவசாய அமைச்சு) சி.பாஸ்கரன்(ஓய்வு நிலை SLAS I விசேட தர அலுவலர்) உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இறுதிப் போட்டிக்கான முதலாவது தெரிவுப் போட்டிகளுக்கான ஆட்டநாயகர்களாக நிதுசன், விதுசி, கிரிஷ்காந் ஆகியோரும் இறுதிப் போட்டிக்கான ஆட்ட நாயகர்களாக கவிபிரசாந், தொடரின் ஆட்ட நாயகனாகவும், சிறப்பாட்ட காரர் சிறந்த துடுப்பாட்ட வீரர் – கீதாஞ்சன், சிறந்த பந்துவீச்சாளர் – கிரிஷ்காந் ஆகியோர் தெரிவாகினர்
1ம் இடத்தை – 1994 born batch அணியும்
2ம் இடத்தை – 1998 born batch அணியும்
3ம் இடத்தை – 1993 born batch அணியும் பெற்றுக்கொண்டன.
