மட்டு.நாவற்குடா பகுதியில் முன்னெடுக்கப்பட்ட பாரிய டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கை

மட்டக்களப்பு நாவற்குடா நொச்சிமுனை கிராம உத்தியோகத்தர் பிரிவில் இன்று வியாழக்கிழமை பாரிய டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

குறித்த பகுதியில் தொடர்ச்சியாக அதிகளவான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டதையடுத்து இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதன்போது சிரமதான பணிகளும் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த டெங்கு நோய் ஒழிப்பு நடவடிக்கையில், மண்முனை வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம சமுர்த்தி பயனாளிகள், விளையாட்டு கழக உறுப்பினர்கள், மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.