Last updated on January 4th, 2023 at 06:54 am

ஆய்வுகளை மேற்கொண்டு நாட்டை முன்னோக்கி நகர்த்துவதற்கான பங்களிப்புகளை செய்ய வேண்டியுள்ளது

ஆய்வுகளை மேற்கொண்டு நாட்டை முன்னோக்கி நகர்த்துவதற்கான பங்களிப்புகளை செய்ய வேண்டியுள்ளது

 

-கல்முனை நிருபர்-

ஆராய்ச்சியாளர்கள் என்ற அடிப்படையிலே நடைமுறை பிரச்சினைகளுக்கு ஆய்வுகளை மேற்கொண்டு ஆய்வுகள் ஊடாக நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்க வேண்டும் என தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தெரிவித்தார்.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ‘ஆய்வுக்கட்டுரைகளின் சுருக்க தொகுப்பு’ வர்த்தக முகாமைத்துவ பீடத்தில் இடம்பெற்றது.

தென்கிழக்குப் பல்கலைக்கழக வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் ‘ ஆய்வுக் கட்டுரைகளின் சுருக்க தொகுப்பு’ மூலம் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுகள் மேற்கொண்டு நாட்டை முன்னோக்கி நகர்த்துவதற்கான பங்களிப்பு’ எனும் தொனிப் பொருளில் பீடாதிபதி கலாநிதி எஸ்.சபீனா தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வுக்கு உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இந்நிகழ்வில் உரையாற்றும் போதே உபவேந்தர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,

ஆய்வு அறிக்கையின் நோக்கம் தனிப்பட்ட மதிப்புகளுடன் தொடர்புடைய ஆய்வின் முக்கியத்துவத்தை மதிப்பிடுவதற்கு பாடத்துக்கு உதவியாகவும், அறிக்கையானது ஆய்வின் உடனடி நோக்கத்தை மட்டுமல்ல, எந்த பெரிய இறுதி நோக்கத்தையும் உள்ளடக்கியிருக்க வேண்டும்.

தேவையான மற்றும் நியாயமான ஆராய்ச்சி மூலோபாயமாக, ஏமாற்றுதல் அல்லது தகவல்களைத்தடுத்து நிறுத்துதல் போன்ற ஆய்வில் ஈடுபட்டிருந்தால், ஆய்வறிக்கையின் நோக்கம் குறைந்தபட்சம் சாத்தியமான ஏமாற்று அல்லது தகவலைதடுத்து நிறுத்தும் வகையில் எழுதப்பட வேண்டும் என தெளிவுப்படுத்தியதுடன் ஆய்வின் நோக்கம் ஆராய்ச்சியின் அறிவியல் நோக்கம் பற்றிய தெளிவான மற்றும் துல்லியமான அறிக்கையாக இருக்கவேண்டும் என்று ஆலோசனை வழங்கினார்.

மேலும், கல்வி ஆராய்ச்சி செய்யும் போது, நோக்கத்தை வரையறுப்பது முக்கியம். ஒரு நோக்க அறிக்கை வரும்போது தரமான அல்லது அளவு ஆராய்ச்சியின் நோக்கத்தை தெளிவாக வரவேற்கிறது. ஆகவே தனிப்பட்ட மற்றும் உலக எடுத்துக்காட்டுகள் மூலம் ஆராய்ச்சி நோக்க அறிக்கையில் விவரங்களை பெற வேண்டும்.

ஆய்வு செய்வதன் நோக்கம் புதிய தேடல்களை உருவாக்கப்பட இருக்கிற ஆராய்ச்சிகளுக்கு மேலதிகமாக அறிவு சார்ந்த தகவல்களைக் கொண்டு சேர்த்தல், ஏற்கனவே செய்யப்பட்ட ஆராய்ச்சி முடிவுகளை மீள் கேள்விக்கு உட்படுத்தல் மற்றும் சரியாக பார்க்க வேண்டும். ஆராய்ச்சி செய்வதற்குரிய ஆர்வம் மற்றும் கடின உழைப்பும், ஆர்வமாக ஈடுபடுகிறோமோ உற்சாகமாக அதற்குரிய ஆராய்ச்சி முடிவுகள் ஒரு உண்மையானதும் உறுதியானதுமாக இருக்கவேண்டும்.

கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகளோடு ஆராய்ச்சியும் ஒரு கல்வியாளர்களின் முக்கிய வகிப்பாகும் மற்றும் கோட்பாடு சம்பந்தமான கல்வியுடன் சேர்த்து ஆராய்ச்சி செய்வதும் அவசியமாகும். சிரேஷ்ட ஆராய்ச்சியாளர்கள், இளம் ஆராய்ச்சியாளர்களை இணைத்து ஆராய்ச்சியில் ஈடுபடுவதன் மூலம் இளம் ஆராய்ச்சியாளர்களுக்கு சிறந்த வழிகாட்டல் வழங்கவேண்டும்.

ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்கள் தங்களுக்கு அண்மையில் உள்ள தொழில் மையங்கள், நிறுவனங்கள், துறை சார்ந்த அமைப்புகள் ஒருங்கிணைந்து ஆராய்ச்சியில் ஈடுபடுதல் வேண்டும் என்றும் உபவேந்தர் தனதுரையில் தெரிவித்தார்.

இந்நிகழ்வின், இறுதியில் ‘ஆய்வு சஞ்சிகை நூலின் முதல் பிரதியை உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கருக்கு வர்த்தக முகாமைத்துவ பீடாதிபதி கலாநிதி எஸ். சபீனா எம்.ஜி. ஹசானால் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் நூலின் பிரதிகள் பீடாதிபதி, துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், சிரேஷ்ட விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள் ஆகியோர்களுக்கு உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கரினால் வழங்கி வைக்கப்பட்டது.

நிகழ்வுக்கு பீடாதிபதிகள், நூலகர், திணைக்களத் தலைவர்கள், பேராசிரியர்கள், சிரேஷ்ட விரிவுரையாளர்கள், நிருவாக உத்தியோகத்தர்கள், கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.