மட்டக்களப்பில் வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்து மாணவன் உயிரிழப்பு
மட்டக்களப்பு-கருவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயான வீதி கண்ணபுரம் மகிழூர் பிரதேசத்தை மாணவன் ஒருவர் பாடசாலை வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்ததில் மரணமான சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
மயான வீதி கண்ணபுரம் மகிழூர் பிரதேசத்தைச் சேர்ந்த தரம்-08 இல் கல்வி கற்றுவரும் மாணவனான கிருபாகரன் சதுர்சன் (13 வயது) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
வழமை போன்று நேற்று அதிகாலை பாடசாலைக்கு சென்ற மாணவன் மாணவர்களுடன் இணைந்து கொண்டு குண்டு எறியும் பயிற்சியில் ஈடுபட்ட பின்னர் வகுப்பறை சென்று மாணவர்களுடன் கலந்துரையாடிக் கொண்டிருக்கும்போது திடீரென மயக்கம் அடைந்த நிலையில் சம்பவத்தை அவதித்த மாணவர்கள் ஆசிரியர்களிடம் தெரிவித்ததை அடுத்து கலுவாஞ்சிகுடி வைத்தியசாலைக்கு மாணவர்கள் உறவினர்கள் ஆசிரியர்களின் உதவியுடன் கொண்டு சென்று அனுமதித்தபோது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலீசாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
களுவாஞ்சிகுடி நீதிமன்ற நீதிவான் ரஞ்சித்குமார் உத்தரவுக்கு அமைவாக, மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தை பார்வையிட்ட பின்னர், பிரேத பரிசோதனையின் பின்னர் நெருங்கிய உறவினர்களிடம் ஒப்படைக்கும் படி உத்தரவிட்டார்.
மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.