மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள 64 ஹோட்டல்கள் நேற்று வியாழக்கிழமை அதிரடியாக சோதனையிடப்பட்டுள்ளது.
இதன்போது, பாவிக்கமுடியாத உணவுப்பொருட்கள் அழிக்கப்பட்டன. ஒரு கடையிலிருந்து பழுதடைந்த கோழி இறைச்சி 35 கிலோ கண்டு பிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.
14 ஹோட்டல்களும், சிற்றுண்டிசாலைகளும் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், 10 ஹோட்டல்களுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டு, உடனே அபராதம் பெறப்பட்டு இறுக்கமான உத்தரவுகளும் வழங்கப்பட்டதாக, சுகாதாரப் பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.









