மட்டக்களப்பு வாவியில் ஆணின் சடலம் மீட்பு

ஏறாவூர் தன்னாமுனை வாவியில் இருந்து முதலைக் கடிக்கு இலக்கான நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்க்கப்பட்டவர் வவுணதீவு நாவற்காடு பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான அமரசிங்கம் ஜெயச்சந்திரன் (வயது – 49) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் கடந்த வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு வாவிக்கு மீன்பிடிக்க சென்றவர் வீடு திரும்பாத நிலையில் இன்று காலை மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களால் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு சென்ற ஏறாவூர் நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி தி.தியாகராசா மரண விசாரணையை மேற்கொண்டதை தொடர்ந்து சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்