இந்து மதத்தின் புனித்தன்மையை சீரழிக்கும் இந்து மதத்தவர்கள்
முகநூலில் லைக் பெறுவதை நோக்காக கொண்டு இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் அண்மைக்காலமாக இந்து ஆலயங்களில் உள்ள விக்கிரகங்களை கட்டி பிடித்தபடியும் , தொட்டு முத்தமிடுவதுமான புகைப்படங்களை தமது முகநூல் உட்பட சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
இந்து மதத்தை எமது மதத்தவர்களே அவமதிப்பது போன்ற இவ்வாறான செயல்களில் பலர் அதிகம் ஈடுபட்டு வருவதோடு, வேறு எந்த ஒரு மத்ததிலும் இவ்வாறான விரும்பதகாத செயற்பாடுகளை எம்மால் காணமுடியாது.
வலைதளங்களில் தாம் வைரலாக வேண்டும் என்று இவ்வாறு இந்து மத்தத்தை அவமதிப்பது போன்ற செயல்களில் உலக அளவில் பரந்து வாழும் இந்து மதத்தவர்கள் ஈடுபட்டு வருவது கடுமையாக கண்டிக்கப்பட வேண்டிய விடயமாகும்.
இதைவிட திருமண நிகழ்வுகள் மற்றும் பிறந்ததினம் உட்பட கொண்டாட்ட நிகழ்வுகளில் கூட இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றமை மிகவும் வேதனைக்குரிய விடயமாகும்.
இந்த விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு ஆலைய நிர்வாகம் , இந்து மத பண்பாட்டாளர்கள் மற்றும் இந்து சமய ஒன்றியங்களிடம் இந்து மத மக்கள் வேண்டுகோளை முன்வைத்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்