மட்டக்களப்பு சிறுவன் உயிரிழப்பு : பெண் காப்பாளர் எவ்வித தொழிற்பயிற்சியும் பெறவில்லை – கீதா

-ச.சந்திரபிரகாஷ்-

கல்முனையில் உள்ள சிறுவர் பாதுகாப்பு இல்லத்தில் 14 வயதுடைய சிறுவன் உயிரிழந்தமை தொடர்பில் உள்ளக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

குறித்த சிறுவர் பாதுகாப்பு இல்லத்தில் கடமையாற்றிய பெண் காப்பாளர் எவ்வித தொழிற்பயிற்சியும் பெறவில்லை, இதனால் ஏற்பட்ட விளைவே இந்த சிறுவனின் உயிரிழப்பு எனவும் தெரிவித்துள்ளார்.

இவர் ஆகக் கூடிய தகமையாக கல்வி உரிய பரீட்சைகளில் சித்தியடைந்துள்ளார் ஆனால் எந்தவொரு சிறுவர் பராமரிப்பு தொழிற் பயிற்சியும் பெறவில்லை என அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாட்டில் உள்ள பாதுகாப்பு இல்லம் மற்றும் தடுப்பு மையங்களில் உள்ள அனைத்து காப்பாளர்களுக்கும் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

கல்வியில் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டும் போதாது, குழந்தைகள் தொடர்பான விடயங்களை கையாளக் கூடிய சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்புடைய மேலதிக செய்திக்கு….

https://minnal24.com/temple-bell-that-took-the-life-of-a-poor-boy-in-batticaloa/