மட்டு .ஆரையம்பதியில் தீவிபத்தில் வீடு முற்றாக சேதம் : ஜீவனோபாயத்திற்கு உதவுமாறு வேண்டுகோள்
மட்டக்களப்பு ஆரையம்பதி செல்வாநகர் கிழக்கு நாவலர் வீதியில் உள்ள வீடொன்று கடந்த 31 ஆம் திகதி சனிக்கிழமை இரவு ஏற்பட்ட தீபரவலினால் எரிந்து முழுமையாக சேதமடைந்துள்ளது.
குறித்த வீட்டில் தீபரவல் ஏற்பட்ட போது மகனை பகுதி நேர வகுப்பிற்கு அனுப்பி விட்டு அருகில் உள்ள சகோதரியின் வீட்டிற்கு சென்றிருந்ததாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
தரம் 08 டில் கல்வி பயிலும் அவரது மகனும் வசித்து வருகின்ற நிலையில் , தாய் காலை உணவாக இடியப்பம், பிட்டு, அப்பம் என்பன அவித்து விற்பனை செய்து வருவதையே ஜீவனோபாயமாக கொண்டுள்ளார்.
தீ விபத்தினால் அவரது வீட்டுத் தளபாடங்கள், முக்கிய ஆவணங்கள், பாடசாலை உபகரணங்கள், புத்தகங்கள் மற்றும் ஆடைகள் என்பன தீயில் முழுமையாக எரிந்துள்ளது.
இந்த நிலையில் இவர்கள் வாழ்வதற்கு தேவையான அடிப்படை வசதிகளை தமக்கு பெற்றுத்தருமாறு , சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை இவர்களுக்கு தனிப்பட்ட ரீதியில் உதவ விரும்பம் உள்ளவர்கள் எமது செய்திப் பிரிவினருடன் தொடர்பு கொள்ளவும்.