மட்டக்களப்பு- திருகோணமலை பிரதான வீதியில் விபத்து
-திருகோணமலை நிருபர்-
மட்டக்களப்பு- திருகோணமலை பிரதான வீதி மூதூர் மல்லிகைதீவு சந்தியில் இடம் பெற்ற வாகன விபத்தில் மூவர் காயமடைந்துள்ள நிலையில் மூதூர் தள வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பில் இருந்து கடமைக்காக திருகோணமலை நோக்கி வந்து கொண்டிருந்த கிழக்கு மாகாண பொது சேவைகள் ஆணைக்குழுவிக்கு சொந்தமான வாகனமே நேற்று திங்கட்கிழமை விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தின் போது மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் கோபாலரட்ணம் உட்பட ஊழியர்கள் இருவர் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.
குறித்த மூன்று பேரில் மட்டக்களப்பு பெரியகல்லாறு பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
விபத்தில் காயமடைந்த செயலாளர் உட்பட இரண்டு பேரும் மூதூர் தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து தொடர்பிலான விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.