பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிக்கும் 16 நாள் செயற்பாட்டின் நிகழ்வு

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிக்கும் 16 நாள் செயற்பாட்டின் நிகழ்வு  மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மண்டூர் மதியொழி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

அதிதிகளை வரவேற்று மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான இந்நிகழ்வில், பல்வேறுபட்ட கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டதுடன், சமுகத்தில் பல சவால்களை எதிர்கொண்டு தங்களது சமுதாயத்தில் சிறந்து விளங்கும் சாதனை பெண்களை கௌரவிக்கும் நிகழ்வும் நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பான விழிப்புணர்வு வீதி நாடகம் அரங்கேற்றப்பட்டதனை தொடர்ந்து, விழிப்புணர்வு நடைபவணியும் ஆரம்பமாகியது, நடைபவனியானது மைதானத்தில் இருந்து ஆரம்பமாகி மண்டூர் பாலமுனை பாடசாலை சந்தியினால் திரும்பி மீண்டும் மைதானத்தை வந்தடைந்தது.

மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பின் பணிப்பாளர் சட்டத்தரணி மயூரி ஜனன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் உளநல வைத்தியர் ஜே.சகாயதர்சினி, மாவட்ட சிறுவர், மகளிர் பிரிவின் நிலைய பொறுப்பதிகாரி ஈ.ஏ.எஸ்.எதிரிசிங்க, வெல்லாவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, அருவி பெண்கள் வலையமைப்பின் ஊழியர்கள், இளையார் குழு, பிரதேச மட்ட பெண்கள் அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.