
போரதீவுப்பற்று பிரிவின் விவாக பதிவாளராக முத்துலிங்கம் ஆனந்தராஜன் நியமனம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தெற்கு மற்றும் எருவில் பற்று பிரதேச செயலாளர் அதிகார பிரதேசத்தில் மண்முனை தெற்கு மற்றும் போரதீவுப்பற்று பிரிவின் விவாக (பொது) பதிவாளராக முத்துலிங்கம்- ஆனந்தராஜன் பதிவாளர் நாயகத்தினால் நிரந்தர நியமனம் பெற்று அதற்கான நியமனக் கடிதத்தினை மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் வழங்கி வைத்தார்.
களுதாவளை இராமகிருஷ்ணா வீதியினை வசிப்பிடமாகக் கொண்ட இவர் திருமதி ஜசிந்தா-ஆனந்தராஜன்(ஆசிரியை) அவரது கணவரும் ஓர் பெண் பிள்ளையின் தந்தையும் ஆவார்.
இவர் தனது பாடசாலைக் கல்வியை முடித்து மேற்படிப்பைத் தொடர்ந்து முகாமைத்துவ பட்டம் பெற்றதுடன் தற்பொழுது திறந்த பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ முதுமாணிப் பட்டப் படிப்பை தொடர்ந்து வருவதோடு
இவர் பொது நிர்வாக சமய சமூக செயற்பாடுகளில் மும்முரமாக செயற்பட்டு வந்ததில் இவருக்கு இலங்கை ஜனாதிபதி செயலகத்தினால் ‘தேசமான்ய’ கௌரவ பட்டமும் வழங்கி வைக்கப்பட்டதோடு இவர் அகில இலங்கை சமாதான நீதிவான் என்பதும் குறிப்பிடத்தக்கது.