தீபாவளியை முன்னிட்டு மதுபானசாலைகளுக்கு பூட்டு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் நாளை மறுதினம் மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பதுளை மாவட்டத்தில் மஹியங்கனை மற்றும் ரிதிமாலியத்த பிரதேச செயலக பிரிவுகள் தவிர்ந்த ஏனைய அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கலால் ஆணையர் ஜெனரல் எம்.ஜே.குணசிறி தெரிவித்துள்ளார்.

பிரதேச செயலாளர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற கோரிக்கைகளை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.