விமான நிலையத்தில் புதிய கட்டுப்பாடுகள்

விமான நிலையங்கள் ஊடாக தங்கம் கடத்தப்படுவதைத் தடுப்பதற்கு புதியக் கட்டுப்பாடுகளை விதிக்க நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதன்படி விமானப் பயணிகள் 22 கரட்டுக்கும் அதிகமான தங்கத்தை அணிந்து வரத் தடை செய்யப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலா பிட்டிய தெரிவித்துள்ளார்.

இதற்கான வர்த்தமானி அறிவிப்பு விரைவில் வெளியாக்கப்படும் என்றும், ஆனால் வெளிநாடுகளில் பணியாற்றி நாடு திரும்புகின்றவர்களுக்கும், சாதாரண பயணிகளுக்கும் இந்த கட்டுப்பாடு பொருந்தாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாளாந்தம் இலங்கைக்கு 50 கிலோ கிராம் தங்கம் கடத்தப்படுவதாகவும், அதனால் மாதாந்தம் அரசாங்கத்துக்கு 30 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்டம் ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இறக்குமதி ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் நாயகத்தின் அனுமதியுடன், 22 கரட் தங்கத்துக்கு மேற்பட்ட தங்க ஆபரணங்களை அணிந்து வருவதில் சிக்கல் இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.