விளையாட்டு மைதானத்தில் விபத்து : இரண்டு மாணவர்கள் உயிரிழப்பு

-பதுளை நிருபர்-

பதுளையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர், மேலும் 09 பேர் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

பதுளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட இரு பாடசாலைகளுக்கு இடையிலான Big match விளையாட்டு நேற்று வெள்ளிக்கிழமையும் இன்றும் பதுளை கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

 

இதன்போது வாகன தொடரணி இடம்பெற்ற போது, பதுளை மாவட்டத்தில் கழிவுகள் சேகரிக்கப்படும் இடத்திற்கு அருகாமையில் உள்ள புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மைதானத்தில் குறித்த கெப் ரக வாகனம் விபத்துக்குள்ளானது.

இதன்போது 11 பேர் காயமடைந்த நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும் சிகிச்சை பலனின்றி 19 வயதுடைய இரண்டு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 09 பேர் பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் அவர்களுள் இருவர் கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலையின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.