சேலையில் சிக்கி உயிரிழந்த குழந்தை
ஹப்புத்தளை பகுதியில் தாயின் சேலையில் சிக்கி குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.
அதே பகுதியை சேர்ந்த 12 வயது குழந்தை ஒன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை இரவு குறித்த குழந்தை தனது சகோதரர்களுடன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தது.
பின்னர், இரண்டு குழந்தைகளை தூங்க வைப்பதற்காக வேறு அறைக்கு அழைத்துச் சென்ற தாய், திரும்பி வந்து பார்த்தபோது, மற்றைய குழந்தை கட்டில் மீது தொங்கவிடப்பட்டிருந்த தொட்டிலில் (சேலை) கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் இருந்ததைக் கண்டார்.
உடனே குழந்தையை மீட்ட போதும், குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற குழந்தையின் பிரேத பரிசோதனையில் கழுத்து நெரிக்கப்பட்டதால் குழந்தை உயிரிழந்தது தெரியவந்துள்ளது.