விராட் கோலிக்கு விருது

2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரருக்கான விருது விராட் கோலிக்கு வழங்கப்பட்டது.

கடந்த ஆண்டு 27 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய விராட் கோலி 1,377 ஓட்டங்களைக் குவித்தார்.

இதில் 6 சதங்கள் மற்றும் 8 அரைச் சதங்களும் உள்ளடங்குகின்றன. அத்துடன் ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரிலும் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 765 ஓட்டங்களைக் குவித்தார்.

இந்த நிலையில் அமெரிக்காவில் வைத்து விராட் கோலிக்கு குறித்த விருது வழங்கிவைக்கப்பட்டது.

மேலும் விராட் கோலி ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதை 4 ஆவது முறையாக வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்