
ரெலோ கட்சியின் தேசிய மகாநாட்டை உடனடியாக நடத்துமாறு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம்
-மூதூர் நிருபர்-
ரெலோ தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனின் தலைமைத்துவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், கட்சியின் 12வது தேசிய மகாநாட்டை உடனடியாக நடத்தி புதிய நிர்வாகிகளை தெரிவு செய்யுமாறு வலியுறுத்தியும், இன்று வெள்ளிக்கிழமை திருகோணமலை மாவட்டத்தில், கட்சி அங்கத்தவர்கள் என குறிப்பிடப்படும் நபர்களால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
கட்சியின் திருகோணமலை மாவட்ட காரியாலயத்தின் முன்பாக பதாகைகளுடன் போராட்டத்தை ஆரம்பித்த அங்கத்தவர்கள், பின்னர் அங்கிருந்து நடைபயணமாக திருகோணமலை கடற்கரையில் அமைந்துள்ள வெலிக்கடை தியாகிகள் அரங்கம் முன்பாக சென்று, தொடர்ந்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
