கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்
-மூதூர் நிருபர்-
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கிழக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர்கள் சார்பாக திருகோணமலை வலய முன்பள்ளி ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக இன்று புதன்கிழமை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்பள்ளி ஆசிரியர்களில் மாதாந்த கொடுப்பணவை உயர்த்தி அவர்களின் வாழ்வாதாரத்துக்கு உதவுதல், முன்பள்ளிகளில் ஆசிரியர்களாக கடமையாற்றுபவர்களுக்கு தரமான அடையாள அட்டையினை வழங்குதல், நீண்ட காலமாக கடமையாட்டும் ஆசிரியர்களை கவனத்தில் கொண்டு 60 வயதுக்கு மேல் அவர்கள் ஓய்வு பெறச் செல்லுமிடத்தில் உதவித்தொகை வழங்குதல், முதலாம் தரத்திற்கு மாணவர்கள் இணைத்துக்கொள்ளும் போது முன்பள்ளிகளில் இருந்து சான்றிதழ்களை இணைத்துக்கொள்ளல் வேண்டும், முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் ஒரு ஆசிரியரின் அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இவ் கவனயீர்ப்பு இடம்பெற்றது.
இறுதியாக கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு சென்று அங்கு மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






