தெற்கு தஹ்ரானில் உள்ள எரிபொருள் களஞ்சியம் மீது தாக்குதல்

ஈரானில் உள்ள எரிபொருள் களஞ்சியமொன்று தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படையுடன் தொடர்புடைய ‘பார்ஸ்’ செய்தி நிறுவனத்தின் தகவல்படி, தெற்கு தஹ்ரானில் அமைந்துள்ள எரிபொருள் களஞ்சியத்தின் மீதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தஹ்ரான் நோக்கித் தாக்குதல் அலைகளை ஆரம்பித்திருப்பதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் அறிவித்த சில நிமிடங்களிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்த ஊடக அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.