ATM அட்டைகள் மூலம் நிதி மோசடி செய்த இளைஞர் கைது
ATM அட்டைகள் மூலம் நிதி மோசடி செய்த இளைஞர் கைது
இலங்கையின் பல்வேறு பகுதிகளில் ATM மோசடி மூலம் நிதி மோசடி செய்த 24 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபர், 15 ATM அட்டைகளுடன் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் மக்களின் ATM பணப்பரிவர்த்தனைகளுக்கு உதவுவது போன்று பாவனை செய்து, அவர்களின் ATM pin இலக்கங்களை பெற்றுக்கொண்டு, அசல் ATM அட்டைக்கு பதிலாக போலி ATM அட்டையை பயன்படுத்தி நிதி மோசடி செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் பிலியந்தலை, கொட்டாவ, தெஹிவளை, மிரிஹான மற்றும் மஹரகம போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து 50க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதையடுத்து, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்