ஏ.டி.எம் மோசடி : ஒருவர் கைது

கொழும்பு-பம்பலப்பிட்டியில் போலி ஏ.டி.எம் காட்களை பயன்படுத்தி, ஏ.டி.எம் இயந்திரமொன்றிலிருந்து 400,000 ரூபா எடுத்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் 36 வயதுடைய குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஏ.டி.எம் அருகே இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் சந்தேக நபரை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

தொம்பே, கபுகொட பிரதேசத்தில் 10 ஏ.டி.எம் அட்டைகளுடன் சந்தேக நபர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தொம்பே பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபர், புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர், எதிர்வரும் டிசம்பர் மாதம் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.