80 லீற்றர் கசிப்புடன் ஒருவர் கைது

-யாழ் நிருபர்-

தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுவன் பகுதியில் 80 லீட்டர் கசிப்புடன் 28 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது கசிப்பு காய்ச்சுவதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

நேற்று வெள்ளிக்கிழமை, காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது குறித்த கைது முன்னெடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர், சான்றுப் பொருட்களுடன் தெல்லிப்பழை பொலிஸாரிடம் பாரப்படுத்தப்பட்டார்.

 

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க