போலி பொது சுகாதார பரிசோதகர் கைது!

ரம்புக்கனை பிரதேசத்தில் பொது சுகாதார பரிசோதகர் எனக் கூறி மோசடி செய்த ஒருவரை நேற்று திங்கட்கிழமை பிற்பகல் ரம்புக்கனை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் செய்த முறைப்பாட்டினை அடுத்து பொலிஸார் கைது செய்துள்ளனா்.

திக்பிட்டிய, அரநாயக்க பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் ரம்புக்கனை நகரில் உள்ள கடையொன்றுக்கு சென்று பொது சுகாதார பரிசோதகர் எனக் கூறி பணத்தினை கோாிய போது கடையின் ஊழியா்கள் அவரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சந்தேக நபர் இன்று செவ்வாய்கிழமை கேகாலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், ரம்புக்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.