2 ½ ஏக்கர் காணியில் கஞ்சா தோட்டம் : விசேட அதிரடிப்படையினர் முற்றுகை
மத்தள விமான நிலைய பகுதியில் பாரிய கஞ்சா செடி தோட்டமொன்று விசேட அதிரடிப்படையினரால் முற்றுகையிட்டு அழிக்கப்பட்டுள்ளது.
விசேட அதிரடிப்படை கதிர்காமம் முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், மத்தள பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மத்தள விமான நிலைய பகுதியில் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அங்கு, சூரியவெவ பிரதேசத்தில் சட்டவிரோதமாக, சுமார் 2 ½ ஏக்கர் காணியில், சுமார் 4½ அடி உயரமுள்ள 18,956 கஞ்சா செடிகளை அதிரடிப்படையினர் முற்றுகையிட்டுள்ளனர்.
மேலும், குறித்த கஞ்சா தோட்டத்துடன் தொடர்புடைய சூரியவெவ பிரதேசத்தைச் சேர்ந்தசந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு கதிர்காமம் பொலிஸ் நிலையத்தில் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளார்.