
தப்பிச் செல்வதற்காக பொலிஸ் உத்தியோகத்தரின் கன்னத்தை கடித்த நபர் கைது
சூதாட்ட நிலையமொன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது தப்பிச் செல்வதற்காக பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் கன்னத்தை கடித்த சந்தேக நபர் ஊர்காவற்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரால் காயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஊர்காவற்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஊர்காவற்துறையில் பொலிஸார் சோதனை நடத்திய போது, ஆறு முதல் ஏழு நபர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் அனைவரும் பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றிருந்த போதிலும், பொலிஸ் கான்ஸ்டபிளால் சந்தேகத்திற்குரிய ஒருவரைப் பிடிக்க முடிந்தது.
சந்தேக நபர் பொலிஸ் கான்ஸ்டபிளை தாக்கியதாகவும், தப்பிக்கும் நோக்கில் அவரது கன்னத்தை கடித்ததாகவும் சோதனையில் ஈடுபட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட 33 வயதான சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.